Sunday, December 19, 2010

வின்டர் ஸ்பெஷல் -1

1. "தலைவருக்கு பொது அறிவு ரொம்ப கம்மி

ஸ்பெக்ட்ரம் பத்தி சொன்னா அந்த ரம் எந்த டாஸ்மாக்ல கிடைக்கும்னு கேக்குறாரு"
"இது வாவது பரவாயில்லை போன வாரம் சொத்து கணக்கு தப்பா போட்டது ஏன்னு கேட்டா அடுத்த தடவை கணக்கு டீச்சர்கிட்ட டியூஷன் பொய் வந்து கரெக்டா போடுரேங்குராறு"
2 . "டேய் இவர் போலி டாக்டர்னு நெனைக்கறேன்"
"ஏன்?
"சர்ஜரிக்கு வயத்த கட் பண்ண சொன்னா ? ஷார்ட்டாவ இல்ல மீடியமாவானு கேக்குறாரு

3 . போலீஸ் ஸ்டேஷன்
"யோவ் அந்த டாக்டர் உன்ன ஆபரேஷன் பண்ண சொல்லி கேட்டதுக்கெல்லாம் கொலை மிரட்டல்னு fir பைல் பண்ண முடியாது
4 "டேய் கம்ப்யூட்டர் துறைல வேலை பார்க்கறியே என்திரன்ல வர்ற மாதிரி நீயும் ஒரு ரோபோ 
 உருவாக்கலாமில்ல ?
"எதுக்கு அது என் ஆள தள்ளிட்டு போகவா?"

5 ."அந்த இன்டெர்வியுக்கு வந்த பயனுக்கு கம்ப்யூட்டர் பத்தியே ஒன்னும் தெரியாதுன்னு நெனைக்கறேன் ?"
"ஏன் என்ன ஆச்சு ?"
"உனக்கு ப்ரோ'க்ராம்' தெரியுமான்னு? கேட்டா எடை கல்லு குடுங்க எடை பார்த்து சொல்ரேங்கறான ?"



Saturday, August 14, 2010

மேதை vs எந்திரன்

சென்ற வாரம் ஒரு வார நாளிதழில் கண்ட ராமராஜனின் பேட்டி

நிருபர் :"சார் உங்களோட நடிச்ச ஹீரோவெல்லாம் இப்ப கவுரவ வேடத்துல நடிக்க ஆரம்பிச்சிடாங்க நீங்களும் அப்படி ட்ரை பண்ணலாமே ...."
ரா' ராஜன் : "முடியாது சார் நடிச்சா ஹீரோ இல்லன்னா நடிக்கவே மாட்டேன்"

இதுக்கு மேலயுமா காமெடி தேவை....... விடமாட்டோம் .....

எல்லாரும் எந்திரன் கதை என்னவாக இருக்குமென்று யோசித்துக்கொண்டிருகும்போழுது

அதற்க்கு சரி போட்டியான மேதை கதை என்னவாக இருக்குமென்று கற்பனை குதிரை சாரி கழுதையை ஓடவிட்டேன் அதன் விளைவு தான் கீழே உள்ள யூகம்,கற்பனை, கெட்ட கனவு எப்படி வேண்டுமானாலும் வைத்துகொள்ளுங்கள்

மேதை பட டிஸ்க்ஷன்.....

டைரக்டர் : சார் எல்லா படமும் இப்ப ரீமேக் ஆகுது அந்த டிரேன்ட்ல நாமளும் பேசாம எங்க ஊரு பாட்டுகாரன ரீமேக் பண்ணலாம் சார்"
ரா' ராஜன் :"சூப்பர் ஐடியா..... , அந்த மாடு போட்ட கன்னுகுட்டி இப்ப இருக்கு அதை யூஸ் பண்ணிக்கலாம் "
டைரக்டர் : சார் இப்பலாம் மிருக வதை அது இதுனு ரொம்ப படுத்துறாங்க பேசாம நீங்க ஒரு ரோபோ மாடு செய்யறீங்க அதை பாட்டு பாடியே அடகுறீங்க.... பால் கரக்குறீங்கன்னு வெச்சுக்கலாம் "
ரா' ராஜன் :"கலக்கல் ஆனா ரோபோ மாடு பால் எப்படி கறக்கும்"
டைரக்டர் :"சார் உங்க பாட்டுக்கு மயங்கி ரோபோ மாடே பால் கரக்குதுனா பாருங்க! அதான் மேதை "
ரா' ராஜன் ஆஹா அருமையான கான்செப்ட் சரி என் காஸ்டியும் என்ன?,
அதே டிரவுசர் தானே ? "
டைரக்டர் : கொஞ்சம் வித்யாசமா யோசிங்க சார்
ரா' ராஜன் சார் அது இல்லாம நமக்கு நடிக்க வராது சரி விடுங்க இந்த தடவ ஹீரோயினுக்கு போட்டுவிடுவோம் அவ்வளவுதானே "
சரி டான்ஸ் மூவ்மேன்ட்லாம் எப்படி சார் "
டைரக்டர் : " சார் அதபத்தி நீங்க ஏன் கவலைபடறீங்க அது ஹீரோயின் தான் கவலைபடனும் நீங்க வழக்கம்போல ஆடரவங்களையும் இழுத்து தொந்தரவு பண்றீங்க அதுதான் உங்க ஸ்டெப்ஸ் "
ரா' ராஜன் " சூப்பர் சார் அதுதான் நம்ம ஸ்டைல் மக்கள் கண்டிப்பா அத எதிர்பர்ப்பங்க."
டைரக்டர் : "சார் இது எல்லாம் போக படத்தோட க்ளைமாக்ஸ ரொம்ப லைவா எடுக்கறோம்"
- மக்கள் எல்லாம் எங்கள காப்பாத்துங்க எங்கள காபாதுங்கன்னு சொல்லி கடவுள வேண்டுறாங்க
ரா' ராஜன் :சூப்பர் அவங்கள நான் காப்பதுரேனா , எப்படி ?"
டைரக்டர் : "ஆமாம் படத்துக்கு எண்டு கார்டு போட்டு "
ரா' ராஜன் : "சார் அதெல்லாம் ஒகே ஆனா படத்துக்கு ஐஸ்வர்யா ராய் ...
டைரக்டர் : "@#$%*****()))"
ரா' ராஜன் "அய்யோ சார் படத்துக்கு ஐஸ்வர்யா ராய் வீட்ல மாடு இருந்தா அதை யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்லவந்தேன் அதுக்குள்ள மயங்கி விழுந்துடீங்கலே ,சரி இதுதான் கதைல மயங்குறது போல "

மேதை விரைவில்.................
வணக்கம


Friday, August 13, 2010

மேதை vs எந்திரன்

சென்ற வாரம் ஒரு வார நாளிதழில் கண்ட ராமராஜனின் பேட்டி
நிருபர் :"சார் உங்களோட நடிச்ச ஹீரோவெல்லாம் இப்ப கவுரவ வேடத்துல நடிக்க ஆரம்பிச்சிடாங்க நீங்களும் அப்படி ட்ரை பண்ணலாமே ...."
ரா' ராஜன் : "முடியாது சார் நடிச்சா ஹீரோ இல்லன்னா நடிக்கவே மாட்டேன்"

இதுக்கு மேலயுமா காமெடி தேவை....... விடமாட்டோம் .....

எல்லாரும் எந்திரன் கதை என்னவாக இருக்குமென்று யோசித்துக்கொண்டிருகும்போழுது
அதற்க்கு சரி போட்டியான மேதை கதை என்னவாக இருக்குமென்று கற்பனை குதிரை சாரி கழுதையை ஓடவிட்டேன் அதன் விளைவு தான் கீழே உள்ள யூகம்,கற்பனை, கெட்ட கனவு எப்படி வேண்டுமானாலும் வைத்துகொள்ளுங்கள்

மேதை பட டிஸ்க்ஷன்
டைரக்டர் : சார் எல்லா படமும் இப்ப ரீமேக் ஆகுது அந்த டிரேன்ட்ல நாமளும்
பேசாம எங்க ஊரு பாட்டுகாரன ரீமேக் பண்ணலாம் சார்"
ரா' ராஜன் :"சூப்பர் ஐடியா..... , அந்த மாடு போட்ட கன்னுகுட்டி இப்ப இருக்கு அதை யூஸ் பண்ணிக்கலாம் "
டைரக்டர் : சார் இப்பலாம் மிருக வதை அது இதுனு ரொம்ப படுத்துறாங்க பேசாம நீங்க ஒரு ரோபோ மாடு செய்யறீங்க அதை பாட்டு பாடியே அடகுறீங்க.... பால் கரக்குறீங்கன்னு வெச்சுக்கலாம் "
ரா' ராஜன் :"கலக்கல்  ஆனா ரோபோ மாடு பால் எப்படி கறக்கும்"
டைரக்டர் :"சார் உங்க பாட்டுக்கு மயங்கி ரோபோ மாடே பால் கரக்குதுனா பாருங்க! அதான் மேதை "
ரா' ராஜன் ஆஹா அருமையான கான்செப்ட் சரி என் காஸ்டியும் என்ன?,
அதே டிரவுசர் தானே ? "
டைரக்டர் : கொஞ்சம் வித்யாசமா யோசிங்க சார்
ரா' ராஜன் சார் அது இல்லாம நமக்கு நடிக்க வராது சரி விடுங்க இந்த தடவ ஹீரோயினுக்கு போட்டுவிடுவோம் அவ்வளவுதானே "
சரி டான்ஸ் மூவ்மேன்ட்லாம் எப்படி சார் "
டைரக்டர் : " சார் அதபத்தி நீங்க ஏன் கவலைபடறீங்க அது ஹீரோயின் தான் கவலைபடனும் நீங்க வழக்கம்போல ஆடரவங்களையும் இழுத்து தொந்தரவு பண்றீங்க அதுதான் உங்க ஸ்டெப்ஸ் "
ரா' ராஜன் " சூப்பர் சார் அதுதான் நம்ம ஸ்டைல் மக்கள் கண்டிப்பா அத எதிர்பர்ப்பங்க."
டைரக்டர் : "சார் இது எல்லாம் போக படத்தோட க்ளைமாக்ஸ ரொம்ப லைவா எடுக்கறோம்"
- மக்கள் எல்லாம் எங்கள காப்பாத்துங்க எங்கள காபாதுங்கன்னு சொல்லி கடவுள வேண்டுறாங்க
ரா' ராஜன் :சூப்பர் அவங்கள நான் காப்பதுரேனா , எப்படி ?"
டைரக்டர் : "ஆமாம் படத்துக்கு எண்டு  கார்டு போட்டு "
ரா' ராஜன் : "சார் அதெல்லாம் ஒகே ஆனா படத்துக்கு ஐஸ்வர்யா ராய் ...
டைரக்டர் : "@#$%*****()))"
ரா' ராஜன் "அய்யோ சார் படத்துக்கு ஐஸ்வர்யா ராய் வீட்ல மாடு இருந்தா அதை யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்லவந்தேன் அதுக்குள்ள மயங்கி விழுந்துடீங்கலே ,சரி இதுதான் கதைல மயங்குறது போல "



மேதை விரைவில்...................................



.








............................................................வணக்கம்.................................


Saturday, July 31, 2010

இந்த வார மொக்கை செய்தி.... லொள்ளு கமெண்ட்ஸ்-1

இந்த வார செய்திகளுக்கு நம்ம லொள்ளு டீமோட கமெண்ட்ஸ்
(உக்காந்து யோசிப்பாங்களோ ....)

1  செய்தி : "மின் கட்டண உயர்வு ".
லொள்ளு டீம் கமென்ட் : இல்லாததை பத்தி ஏன் கவலை படனும் அப்படியே இருந்தாலும் இந்த சுமைய மின்சார வாரியமே சமாளிச்சு உதவும்  " இன்னும் ஒரு மணி நேரம் கரென்ட் கட் பண்ணி தான்

2 . செய்தி: இப்போதைக்கு தமிழகத்தில் தேர்தல் இல்லை"
லொள்ளு டீம் கமென்ட் : நம்ம பண கஷ்டம் அவங்களுக்கு எங்க தெரிய போகுது"

3  செய்தி: சென்னையில் உல்லாச வாழ்க்கை வழ கொள்ளை அடித்த சிறுவன் கைது" : 
லொள்ளு டீம் கமென்ட்: எதாவது பொலிடிகல் சயின்ஸ் ஸ்டுடன்ட்னு  நெனைக்கறேன் ப்ராஜெக்டா இருக்கும்"

4  . செய்தி: காமன் வெல்த்  போட்டிகளுக்கு 300 கோடி ரூபாய் செலவழித்திருகிறது இந்திய அரசு"
லொள்ளு டீம் கமென்ட் ஆளே இல்லாத டீ கடைல யாருக்குடா டீ ஆத்துறீங்க , விளையாட்டு வீரர்கள ஊகுவிக்காம  போட்டி அலங்கரிக்க  செலவழிக்கும் உங்களைஎல்லாம் ....... தில்லாலங்கடி  பார்க்க வெச்சு  கொடுமை படுத்தனும்
.

Friday, May 7, 2010

சுறாவ ஓட்டுவோம் (ஜோக்ஸ்)

அட சுறாவ பத்தி நிறையா விமர்சனம் வந்தாச்சு சரி நம்ம வித்தியாசமா ஓட்டலாமேன்னு முடிவுபண்ணி .... இறங்கிட்டேன் என்னங்க பண்றது ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்கமாட்டேன் ........ .....

1 . சார் படம் பேரு சுறா னு வெச்சு இப்படி எடுக்காதிங்கன்னு சொன்னா கேட்டிங்களா "
"ஏன் என்ன ஆச்சு"
"discovery சேனல்ல படத்த ஒளிபரப்ப ரைட்ஸ் கேட்டு வந்திருகாங்க "

2 . சார் போன படத்துக்கும் இந்த படத்துக்கும் என்ன சார் வித்தியாசம்"
"போன படத்தோட பேர் வேட்டைக்காரன் இந்த படத்தோட பேர் சுறா போன படத்துல ஆட்டோ ஓட்றீங்க இந்த படத்துல...போட் ஓட்றீங்க "
" அஹா ரொம்ப வித்யாசமா இருக்கு சார்..... "
"சரி நீங்க நாலு பாட்டுக்கு மட்டும் கால்ஷீட் குடுங்க மிச்சத்த போன படத்துலேர்ந்து பிட்டு பிட்டா எடுதுகறோம்"

3 . " அது என்ன சார் விஜய்க்கு போட்டி தமிழ் நாட்டுலயே இல்லங்கராறு"
"ஆமாம் அவருக்கு போட்டி சிரஞ்சீவி .நாகர்ஜுனா ....இப்படி தெலுங்கு பட ஹீரோக்கள் தானே"

4 . சார் நீங்க படத்துக்கு சுறா னு பேர் வெச்ச ரகசியம் என்ன "மீளமுடியாத கடிதான் "

5 . "சார் இந்த படம் பார்க்க வந்ததுக்காக தற்கொலை முயற்சின்னு என்ன அர்ரெஸ்ட் பண்றது அநியாயம் சார்"

6 . சார் நீங்க மூணு மாசத்துக்கு ஒரு படம் ரிலீஸ் பண்ற ரகசியம் என்ன சார்"
" அட இந்த படம் ரிலீஸ் ஆனதும் இதுக்கு முந்தைய படமே பரவா இல்லன்னு இன்னும் கொஞ்ச நாள் ஓடுமில்ல அதான்"

7 . "சார் இந்த படத்துல ஹீரோயின் லூசு வில்லன் முட்டாள் அதுபோக ஓயாம கத்திக்கிட்டே இருக்கிறவன் "
" சூப்பர் சார் சரி ஷூட்டிங் லொகேஷன் எங்க ?"
" கீழ்பாக்கம் தான்"

8 . "சார் அநியாயம் பண்றாங்க இந்த டி வி டி காரங்க"
ஏன் என்ன ஆச்சு"
"எப்படி இருந்தாலும் உங்க அடுத்த படமும் இதே கதைதான்னு இப்பவே காவல்காரன் டி வி டிய ரிலீஸ் பண்ணிட்டாங்க "

9 ." சார் இந்த படம் ஒரு த்ரில்லர் படம் பாக்கற எல்லாரும் கடசிவர எதிர்ப்பார்கறாங்க ஆனா அவங்க எதிர்ப்பார்கறது நடக்காது"
"சூப்பர் அப்படி என்னத்த எதிர்பார்ப்பாங்க சார்"
"கதையத்தான்"
??

இவை அனைத்தையும் விட தியேட்டர்ல போடற வாசகம் தானுங்க பெரிய காமெடி " இப்படம் சாட்டிலைட் மூலம் ஒளிபரப்பபடுவதால் தயவு செய்து ஒன்ஸ் மோர் கேட்காதீர்கள்"


Saturday, April 17, 2010

காமெடியன்கள வெச்சு காமெடி-ஜோக்ஸ்

அட காமெடி பண்றவங்க சீரியஸா அடிச்சிகறாங்க அபப இவங்கள வெச்சு நம்ம காமெடி பண்ணவேண்டியதுதான் ..... எப்படி லாஜிக் ....

(பி.கு: நம் சேட்டை கமெண்ட் இவர்களை பார்த்து : " என்ன இது சின்ன புள்ள
தனமா இருக்கு ")

1 . " ஜட்ஜ் ஐயா இங்க இருக்கற புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும் தொடர்ந்து பயங்கரமா சண்டை போட்டுகிட்டே இருக்காங்க"
"அட ஏன்யா சுத்தி வளைக்கர வடிவேலு சிங்கமுத்து மாதிரின்னு சொல்லு!.... சரி அப்ப பிரிச்சிட வேண்டியதுதான்"

2 "ஏன்யா பல கோடி ரூபாய்
நில மோசடிங்கரையே அப்படி எந்த நிலத்த ஏமாத்தி உன்கிட்ட வித்தார் ""வடமா'நிலத்த'"

3 . "அண்ணே வடிவேலு-சிங்கமுத்து செந்தில்-கவுண்டமணி ரெண்டு ஜோடிக்கும் உள்ள வித்யாசம் என்ன?
"செந்தில்-கவுண்டமணி - ரெகார்டட் கிரிக்கெட் மேட்ச்வடிவேலு-சிங்கமுத்து -லைவ் கிரிக்கெட் மேட்ச் "

4 . "டேய் வாடா போலிஸ் திருடன் விளையாட்டு விளையாடலாம் "
" போடா அது பழசு வா வடிவேலு-சிங்கமுத்து விளையாட்டு விளையாடலாம்"

5 . "ஏன்யா திருவிழால எப்பவும் வர கோழி சண்டை, ஆடு சண்டைலாம் போரடிக்குது இந்த தடவை வடிவேலு-சிங்கமுத்துவ கூப்பிடலாம்னு நீ சொல்றது கொஞ்சம் ஓவரா இல்ல "

6 . "ஏன்டா அண்ணன் தம்பி ரெண்டு பெரும் இப்படி கீரியும் பாம்புமா அடிச்சிகரீங்களே உங்க வீட்ல கேக்கவே மாட்டாங்களா"
"நாங்க பரவா இல்லை சார் எங்க அம்மா அப்பா வடிவேலு-சிங்கமுத்து மாதிரி அடிச்சிப்பாங்க"

இதை முடிக்கும் பொழுது என் மனதில் தோன்றிய வசனம் .வடிவேலு: " எங்கள வெச்சு காமடி கீமடி பண்ணலியே "

Saturday, April 10, 2010

சம்மர் ஸ்பெஷல்-1 (சூடான ஜோக்ஸ்)


அட வெயில் ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு இதபத்தி சீரியஸா நெறையா பேசியாச்சு இன்னும் என்னத்த சொல்றது.... சரி ....
ஆரம்பிப்போம் நம் சேட்டையை ...."
பி. கு : ஜோக்ஸ படிச்சிட்டு எனக்கு நானே சொல்லி கொண்டது "வெயில் ஜாஸ்தியான இப்படிதான்"

1 ஏன் அண்ணே இப்படி வெளில சுத்துறீங்க .... வெயில் எப்படி அடிக்குதுன்னு பாருங்க "
"அடபோப்பா இது கொஞ்ச நேரம் தான் அடிக்கும் வீட்டுக்கு போனா பொண்டாட்டி தொடர்ந்து அடிக்கும்"

2 . "என்னப்பா டீ இவ்வளவு ஆறி பொய் இருக்கு "
" கொஞ்ச நேரம் கைல வெச்சுக்குங்க அதுவே சூடாகிடும்"

3 "பசங்களா கேளுங்க எந்த உணவையுமே காச்சி சூடா வெச்சாத்தான் பேக்டீரியா தங்காது "
" போங்க டீச்சர் அப்படி பார்த்த பூமியே பயங்கர சூடா இருக்கு எல்லா பேக்டிரியாவும் இந்நேரத்துக்கு செத்திருக்கனுமே

4 . "சர்வர் சூடா என்னையா இருக்கு "
"பூமி தான்

5 . "தம்பி, இராமாயணம் இந்த காலத்துல நடந்திருந்தா எப்படி இருந்திருக்கும்"
"ராமர் சீதாவ அக்னி குண்டதுல நடந்துவர சொல்றதுக்கு பதிலா வெயிலில நடந்து வர சொல்லிருப்பார் "

6 "தலைவரே வெயில கொடுமை தாங்க முடியலைதான் அதுக்காக தினமும் ஒரு பிரபலத்த கூப்பிட்டு உங்கள புகழ சொல்லி உச்சி குளிர்றது கொஞ்சம் டூ மச் "

7 "டாக்டர் நீங்க என் புருஷன்கிட்டே வேயில் காலமா இருக்கு நெறைய நீர் ஆகாரமா சாப்பிடுங்கன்னு சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டு உயிரை எடுக்கறாரு "
"ஏன் மா என்ன ஆச்சு
" நீருக்கு சாராயமும் ஆகாரத்துக்கு சைடுடிஷும் கேக்கறாரு

8 . "டேய் மொட்டை மாடில தண்ணி ஊத்துடா கூலா இருக்கும் "
"அடபோங்கப்பா அப்ப பூமி மேல தண்ணி ஊத்த சொல்லுங்க உலகமே கூலா இருக்கும்"
"?!!!?"

Sunday, March 28, 2010

பீலா நோ பீலா


இப்பொழுதேல்லாம் மெகா சீரியல்களின் அடுத்த அவதாரமாய் தொலைகாட்சிகளின் லைவ் போட்டிகள்(சான்று" டீலா நோ டீலா ) . அதில் ஒவ்வொரு வாரமும் களந்துகொள்பவர்களை அவர் அவர் சோகங்களை கூறவைத்து அழவைத்து நம் அனுதாபத்தை தேட முயற்ச்சிக்கும் அந்த ஷோக்களின் தொல்லை தாங்க முடிய வில்லை ..... விடுவோமா நாம் ........தொடங்கியது இதை ஒட்டிய நம் நக்கல் நையாண்டி... இதோ....

1. " என்னங்க நம்ம பயன் ஓயாம அழுதுட்டே இருக்கான் "
"அது ஒன்னும் இல்லை அவன் டிவி ஷோ போகறதுக்கு ஒத்திகை பாத்துட்டிருக்கான் " ,......

2 . "ஏம்மா இந்த ஷோ ள கலந்துக்க வந்திருக்கீங்க உங்களோட ஏதாவது சொகத்த நிகழ்சிகள்ள பகிர்ந்துக்குங்க "
"என்னத்த சொல்றது நான் பொறந்து ஒரு வருஷம் நடக்கவே முடியல அப்புறம் கஷ்டப்பட்டு ஒரு வருஷதிருக்கு அப்புறம் தான் நடக்கவே ஆரம்பிச்சேன்.... ரெண்டு வருஷத்துக்கு சரியா பேச்சே வரல அப்புறம் தான் கஷ்டப்பட்டு பேசவே ஆரம்பிச்சேன்.....
"கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு மா கண்ணை தொடசிகுங்க"

3 . " டேய் இப்படி நீ அழுமூன்ஜியா இருந்தா யாருமே உன்ன விளையாட்டுக்கு செர்த்துக்கமட்டாங்க "
"போப்பா டிவி காரங்க சேர்த்துப்பாங்க"

4 . " சார் உங்க போட்டில கலந்துக்க ஆர்வமா இருக்கேன் எப்படி என்ன தயாற்படுத்திக்கனும்னு கொஞ்சம் சொல்லுங்க "
"முதல்ல வாரம் முழுக்க மெகா சீரியல் பாருங்க.... அப்புறம் உங்களுக்கு ஸ்க்ரீனிங் சாரி க்ரையிங் டெஸ்ட் வெச்சு செர்துப்போம்"

5 . . "பசங்களா இன்றைய பாடம் பார்ப்போமா "ஓடி விளையாடு பாப்பா...."
"போங்க சார் அழுது விளையாடினாத்தான் டிவி ல சான்ஸ் கிடைக்கும்


Wednesday, March 24, 2010

போலி மருந்து ஜோக்ஸ்


சென்னையில் காலாவதியான போலி மருந்துகளை விற்ற ஆசாமியை போலீஸ் பிடித்தது .... இது செய்தி இதை ஒட்டிய நம் நக்கல் நையாண்டி இதோ

1 . டேய் அந்த கடைக்காரன் போலி மருந்து விககறான்னு நெனைக்கறேன்
"எப்படி சொல்றீங்க "
"மருந்து கேட்டா... உங்களுக்கு பிடிச்ச கலரா நீங்களே செலக்ட் பணிகுங்கனு சொல்றான் "

2 . "நம்ம டாக்டர் இன்னும் பழைய தொழிலை மறக்கல
' எப்படி சொல்ற
" அந்த பேஷன்ட் மருந்து சீட்டு கேட்டா, கிளிய வெச்சு நல்ல சீட்டு எடுத்துக் குடுக்க சொல்றாரு

3 "டாக்டர் இந்த மருந்த சாப்பிட்டா எனக்கு குணமாகிடுமா"
"கவலையே படாதீங்க குணா ஆகிடும் "

4 என்ன டாக்டர் அந்த பேஷன்ட் நீங்க கொடுத்த மருந்து சரி இல்லைனா கன்ஸ்யுமர் கோர்ட் போவேங்கறார் நீங்களும் சரின்னு விடுறீங்க"
"சொர்கத்துலையோ நரகத்துலையோ அந்த வசதி இல்லைங்கற நம்பிக்கைளதான்"

5 . "டாக்டர் ரெண்டு நாளா தலைவலி கொஞ்சம் கொஞ்சமா உயிரை வாங்குது
"கவலபடாதீங்க மருந்து தரேன் மொத்தமா வாங்கிடும்"

6 ." என்ன ஆச்சு நம்ம டாக்டர போலீஸ் பிடிச்சிட்டு போகுது
"ஆமாம் ஸ்பான்சர் கிடைக்குதுனு என்ன மருந்துனு கூட பார்க்காம மருந்த எழுதி கொடித்திருக்கார் "
"அப்படி என்ன மருந்து "
"வெடி மருந்து"


Saturday, March 20, 2010

பண மாலை ஜோக்ஸ்

நியூஸ்- உத்திர பிரதேச முதல்வர் மாயவதிக்கு பல கோடி மதிப்புள்ள பண மாலை அணிவிக்கப்பட்டது இதை ஒட்டிய நம் நக்கல், நையாண்டி இதோ ....

1 " தலைவர் ஏன் கோவமா இருக்கார்
"அவருக்கு அணிவிக்கப்பட்ட பண மாலையில் இரண்டு கள்ள நோட்டாம்"

2 "என்னையா இது மாலை"
"மன்னிச்சுக்குங்க தலைவரே என்கிட்ட கை வசம் பணம் இல்லை அதான் போஸ்ட் டேடட் செக்கா போட்டிருக்கேன்

3 "நம்ம எல்லாரும் பண மாலை அணிவிச்சிருகோம் அப்புறம் என்ன அந்த தொண்டர மட்டும் தலைவர் ஸ்பெஷலா கவனிகறார்
ஆமாம் அவன் போட்டது ரொம்ப காஸ்ட்லீயான காய்கறி மாலை"

4 "தலைவருக்கு பொது அறிவு ரொம்ப கம்மி ஆகிருச்சு
"ஏன்"
" பண மாலை போட்டா IT இலிருந்து ஆள் வருவாங்கனு சொன்னேன் , அதுக்கு அவங்க வந்ததும் தன்னோட லாப்டப்ப சரி பண்ணி வெச்சிட்டு போக சொல்லுங்கறாரு"

5 . "இருந்தாலும் தலைவர் கொஞ்சம் ஓவரா போறார்
"ஏன் என்ன ஆச்சு"
"நெறைய பண மாலை வரவும் வீட்டு வாசள்ள இங்கு கடன் ஏற்றுகொள்ளபடமட்டதுன்னு போர்டு மாட்டி வெச்சிருக்கார்"

6 . "ச்சை இந்த கிரெடிட் கார்டுகாரங்க தொல்லை தாங்க முடியல
" ஏன் தலைவரே
" கூட்டத்துக்கு நடுவில பண மாலைக்கு பதிலா கிரெடிட் கார்டு மாலைய போட்டு போயிருக்கான்"
"கவலை படாதீங்க தலைவரே அடுத்து பெரிய பில் மாலை வரும்"

7. மேல் கூறிய அனைத்தையும் விட பெரிய நகைச்சுவை மாயாவதியை பற்றி அவர்கள் எடுபிடிகள் கூறியிருக்கும் கறுத்து
"மாயாவதி எளிமையானவர் ஏழைகளின் தோழர்"


Tuesday, March 9, 2010

நித்தியானந்தா சீசன்

போலி சாமியார் ஜோக்ஸ் :

1 . "சுவாமி உங்கள பத்தி வீடியோ ரிலீஸ் ஆகிருக்கு"
"ச்சை முதல்ல திருட்டு dvd அ ஒழிக்க முதல்வர்கிட்ட மனு குடுக்கணும்"

2 . ஸ்வாமியோட தற்பெருமையால பாரு போலீஸ் நம்மள வலை வீசி தேடுது "
"ஏன் என்ன ஆச்சு"
" இந்தியாவிலயே அதிகமா மகளிர் இட ஒதுக்கீடு இருக்கறது நம்ம ஆசிரமத்தில் தான்னு பேட்டி குடுத்திருக்கார் "

3. "கதவை திற....... னு தத்துவங்களெல்லாம் உதிர்த்துட்டு இப்படி கதவை
மூடி ஒளிஞ்சிட்டிருகிங்கலே "
" காற்று வரட்டும்னு சொன்னேன் போலீஸ் இல்ல வருது "

4 . "Finance கம்பெனி ஆரம்பிச்ச நீங்க இப்ப ஆசிரமம் அரம்பிசிருகீங்க ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன சுவாமி
" வித்தியாசம்- Finance கம்பெனில குடுக்கற பணம் donationஉ தெரியாம மக்கள் ஏமாறுவாங்க
ஆசிரமத்துக்கு குடுக்கற பணம் donationஉ தெரிஞ்சும் மக்கள் ஏமாறுவாங்க.....
ஒற்றுமை- ரெண்ட பத்தியும் மக்கள் பின்னாடி பீல் பண்றது
சுவாமி "உங்க அடுத்த டார்கெட்"
"ஸ்கூல், காலேஜ்"

5. நித்தியானந்தா படத்தில் இருப்பது தான் இல்லை கிராபிக்ஸ் என்று சமாளிக்கிறார்.... வேறு எவ்வாறெல்லாம அவர் சமாளிக்ககூடும் என்று பார்ப்போம்... நகைச்சுவைக்காக.....

  • படத்தில் இருப்பது நான் இல்லைங்க என் தம்பி.... சத்தியானந்தா ... நாங்க ரெட்டை பிறவிகள்
  • லேபர் லா படி 8 மணி நேரம் தான் வேலை நான் என் சாமியார் duty முடிந்து என்ன செய்தால் உங்களுக்கென்ன.
  • கடந்த ஒரு மதமாக எனக்கு செலெக்டிவ் அம்னீஷியா நான் சாமியார் என்பதையே மறந்துவிட்டேன் "
  • அட நான் ஆளே இலிங்க நான் ஒரு கிராபிக்ஸ் லைட்ல மட்டும் தெரிவேன் ஆப் பண்ணி பாருங்களேன் ....(எஸ்கேப்)