Friday, May 7, 2010

சுறாவ ஓட்டுவோம் (ஜோக்ஸ்)

அட சுறாவ பத்தி நிறையா விமர்சனம் வந்தாச்சு சரி நம்ம வித்தியாசமா ஓட்டலாமேன்னு முடிவுபண்ணி .... இறங்கிட்டேன் என்னங்க பண்றது ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்கமாட்டேன் ........ .....

1 . சார் படம் பேரு சுறா னு வெச்சு இப்படி எடுக்காதிங்கன்னு சொன்னா கேட்டிங்களா "
"ஏன் என்ன ஆச்சு"
"discovery சேனல்ல படத்த ஒளிபரப்ப ரைட்ஸ் கேட்டு வந்திருகாங்க "

2 . சார் போன படத்துக்கும் இந்த படத்துக்கும் என்ன சார் வித்தியாசம்"
"போன படத்தோட பேர் வேட்டைக்காரன் இந்த படத்தோட பேர் சுறா போன படத்துல ஆட்டோ ஓட்றீங்க இந்த படத்துல...போட் ஓட்றீங்க "
" அஹா ரொம்ப வித்யாசமா இருக்கு சார்..... "
"சரி நீங்க நாலு பாட்டுக்கு மட்டும் கால்ஷீட் குடுங்க மிச்சத்த போன படத்துலேர்ந்து பிட்டு பிட்டா எடுதுகறோம்"

3 . " அது என்ன சார் விஜய்க்கு போட்டி தமிழ் நாட்டுலயே இல்லங்கராறு"
"ஆமாம் அவருக்கு போட்டி சிரஞ்சீவி .நாகர்ஜுனா ....இப்படி தெலுங்கு பட ஹீரோக்கள் தானே"

4 . சார் நீங்க படத்துக்கு சுறா னு பேர் வெச்ச ரகசியம் என்ன "மீளமுடியாத கடிதான் "

5 . "சார் இந்த படம் பார்க்க வந்ததுக்காக தற்கொலை முயற்சின்னு என்ன அர்ரெஸ்ட் பண்றது அநியாயம் சார்"

6 . சார் நீங்க மூணு மாசத்துக்கு ஒரு படம் ரிலீஸ் பண்ற ரகசியம் என்ன சார்"
" அட இந்த படம் ரிலீஸ் ஆனதும் இதுக்கு முந்தைய படமே பரவா இல்லன்னு இன்னும் கொஞ்ச நாள் ஓடுமில்ல அதான்"

7 . "சார் இந்த படத்துல ஹீரோயின் லூசு வில்லன் முட்டாள் அதுபோக ஓயாம கத்திக்கிட்டே இருக்கிறவன் "
" சூப்பர் சார் சரி ஷூட்டிங் லொகேஷன் எங்க ?"
" கீழ்பாக்கம் தான்"

8 . "சார் அநியாயம் பண்றாங்க இந்த டி வி டி காரங்க"
ஏன் என்ன ஆச்சு"
"எப்படி இருந்தாலும் உங்க அடுத்த படமும் இதே கதைதான்னு இப்பவே காவல்காரன் டி வி டிய ரிலீஸ் பண்ணிட்டாங்க "

9 ." சார் இந்த படம் ஒரு த்ரில்லர் படம் பாக்கற எல்லாரும் கடசிவர எதிர்ப்பார்கறாங்க ஆனா அவங்க எதிர்ப்பார்கறது நடக்காது"
"சூப்பர் அப்படி என்னத்த எதிர்பார்ப்பாங்க சார்"
"கதையத்தான்"
??

இவை அனைத்தையும் விட தியேட்டர்ல போடற வாசகம் தானுங்க பெரிய காமெடி " இப்படம் சாட்டிலைட் மூலம் ஒளிபரப்பபடுவதால் தயவு செய்து ஒன்ஸ் மோர் கேட்காதீர்கள்"