Sunday, March 13, 2011

கூட்டணி, பேரம்........


அட !!
நாட்டு மக்களின் வரி பணத்தை தகுந்த வழியில் செலவழிக்கவே   
ஆட்சி .... இதை பணம் புரளும் பிசினஸ் ஆக்கி இப்பொழுது
ஜாயின்ட்  வென்ச்சர் (கூட்டணி)   
வைத்து செயல்படுமளவிற்கு    தொழில் கூடகமாகவே மாற்றிவிட்டனர்..
 பிந்நாளில்  உலக வர்த்தக கொள்கைகள் இதற்கும் வரலாம்!. சரி இவர்களுடைய கூட்டணி பேரம் பேசும் முறையை  நாம் கொஞ்சம் ஓட்டுவோம்

1 . தலைவரே வாசல்ல  எவனோ ஒருத்தன் ஐயா  அம்மான்னு  கூப்டுட்டு இருக்கான் பிச்சை போட்டு சீக்கிரம் அனுப்புங்க"
அட அவன் பிச்சைகாரன் இல்லையா நம்ம கூட்டணி கட்சி தலைவர் 2  சீட்டு அதிகமா வேணும்னு கேட்டு நிக்கறாரு "

2  "தலைவர் இந்திய கிரிகெட் டீமையும் நம்ம கட்சி போல நெனச்சிட்டாறு  
"ஏன்"
"தோல்விய தடுக்க உடனிடியா ஆஸ்திரேலிய டீமோட கூட்டு வெச்சுக்க சொல்றாரு!!!

3  தலைவரே ஏன் எல்லாரும்  கூட்டணி   வெச்சே ஆட்சி பணனும்னு நினைக்கறீங்க ?
கண்ணா ! கொள்ளை கூட்டமா  தான்   வரும் சிங்கிளா வராது

4  தலைவரே எலெக்ஷன்ல    நிக்க எங்க அணிக்கு எக்ஸ்ட்ரா 25  சீட் வேணும்
" நிக்கிறதுக்கு எதுக்குயா சீட் உக்கார தான் சீட் அதனால சீட் தரமுடியாது "

5 . தலைவரே இப்படி  வெக்கம், மானம் ,சூடு,  சுரணை எதுவுமில்லாம அந்த கட்சியோட கூட்டணி வேசிருகீங்கலே ?
"அட அப்படி எல்லாம் கூட கரன்சி இருக்கா?கவலைபடாதீங்க   அந்த கூட்டணி கட்சிகிட்ட பேரம் பேசி அதையும் கேட்டு வாங்கிக்கலாம்"