Sunday, March 28, 2010

பீலா நோ பீலா


இப்பொழுதேல்லாம் மெகா சீரியல்களின் அடுத்த அவதாரமாய் தொலைகாட்சிகளின் லைவ் போட்டிகள்(சான்று" டீலா நோ டீலா ) . அதில் ஒவ்வொரு வாரமும் களந்துகொள்பவர்களை அவர் அவர் சோகங்களை கூறவைத்து அழவைத்து நம் அனுதாபத்தை தேட முயற்ச்சிக்கும் அந்த ஷோக்களின் தொல்லை தாங்க முடிய வில்லை ..... விடுவோமா நாம் ........தொடங்கியது இதை ஒட்டிய நம் நக்கல் நையாண்டி... இதோ....

1. " என்னங்க நம்ம பயன் ஓயாம அழுதுட்டே இருக்கான் "
"அது ஒன்னும் இல்லை அவன் டிவி ஷோ போகறதுக்கு ஒத்திகை பாத்துட்டிருக்கான் " ,......

2 . "ஏம்மா இந்த ஷோ ள கலந்துக்க வந்திருக்கீங்க உங்களோட ஏதாவது சொகத்த நிகழ்சிகள்ள பகிர்ந்துக்குங்க "
"என்னத்த சொல்றது நான் பொறந்து ஒரு வருஷம் நடக்கவே முடியல அப்புறம் கஷ்டப்பட்டு ஒரு வருஷதிருக்கு அப்புறம் தான் நடக்கவே ஆரம்பிச்சேன்.... ரெண்டு வருஷத்துக்கு சரியா பேச்சே வரல அப்புறம் தான் கஷ்டப்பட்டு பேசவே ஆரம்பிச்சேன்.....
"கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு மா கண்ணை தொடசிகுங்க"

3 . " டேய் இப்படி நீ அழுமூன்ஜியா இருந்தா யாருமே உன்ன விளையாட்டுக்கு செர்த்துக்கமட்டாங்க "
"போப்பா டிவி காரங்க சேர்த்துப்பாங்க"

4 . " சார் உங்க போட்டில கலந்துக்க ஆர்வமா இருக்கேன் எப்படி என்ன தயாற்படுத்திக்கனும்னு கொஞ்சம் சொல்லுங்க "
"முதல்ல வாரம் முழுக்க மெகா சீரியல் பாருங்க.... அப்புறம் உங்களுக்கு ஸ்க்ரீனிங் சாரி க்ரையிங் டெஸ்ட் வெச்சு செர்துப்போம்"

5 . . "பசங்களா இன்றைய பாடம் பார்ப்போமா "ஓடி விளையாடு பாப்பா...."
"போங்க சார் அழுது விளையாடினாத்தான் டிவி ல சான்ஸ் கிடைக்கும்


Wednesday, March 24, 2010

போலி மருந்து ஜோக்ஸ்


சென்னையில் காலாவதியான போலி மருந்துகளை விற்ற ஆசாமியை போலீஸ் பிடித்தது .... இது செய்தி இதை ஒட்டிய நம் நக்கல் நையாண்டி இதோ

1 . டேய் அந்த கடைக்காரன் போலி மருந்து விககறான்னு நெனைக்கறேன்
"எப்படி சொல்றீங்க "
"மருந்து கேட்டா... உங்களுக்கு பிடிச்ச கலரா நீங்களே செலக்ட் பணிகுங்கனு சொல்றான் "

2 . "நம்ம டாக்டர் இன்னும் பழைய தொழிலை மறக்கல
' எப்படி சொல்ற
" அந்த பேஷன்ட் மருந்து சீட்டு கேட்டா, கிளிய வெச்சு நல்ல சீட்டு எடுத்துக் குடுக்க சொல்றாரு

3 "டாக்டர் இந்த மருந்த சாப்பிட்டா எனக்கு குணமாகிடுமா"
"கவலையே படாதீங்க குணா ஆகிடும் "

4 என்ன டாக்டர் அந்த பேஷன்ட் நீங்க கொடுத்த மருந்து சரி இல்லைனா கன்ஸ்யுமர் கோர்ட் போவேங்கறார் நீங்களும் சரின்னு விடுறீங்க"
"சொர்கத்துலையோ நரகத்துலையோ அந்த வசதி இல்லைங்கற நம்பிக்கைளதான்"

5 . "டாக்டர் ரெண்டு நாளா தலைவலி கொஞ்சம் கொஞ்சமா உயிரை வாங்குது
"கவலபடாதீங்க மருந்து தரேன் மொத்தமா வாங்கிடும்"

6 ." என்ன ஆச்சு நம்ம டாக்டர போலீஸ் பிடிச்சிட்டு போகுது
"ஆமாம் ஸ்பான்சர் கிடைக்குதுனு என்ன மருந்துனு கூட பார்க்காம மருந்த எழுதி கொடித்திருக்கார் "
"அப்படி என்ன மருந்து "
"வெடி மருந்து"


Saturday, March 20, 2010

பண மாலை ஜோக்ஸ்

நியூஸ்- உத்திர பிரதேச முதல்வர் மாயவதிக்கு பல கோடி மதிப்புள்ள பண மாலை அணிவிக்கப்பட்டது இதை ஒட்டிய நம் நக்கல், நையாண்டி இதோ ....

1 " தலைவர் ஏன் கோவமா இருக்கார்
"அவருக்கு அணிவிக்கப்பட்ட பண மாலையில் இரண்டு கள்ள நோட்டாம்"

2 "என்னையா இது மாலை"
"மன்னிச்சுக்குங்க தலைவரே என்கிட்ட கை வசம் பணம் இல்லை அதான் போஸ்ட் டேடட் செக்கா போட்டிருக்கேன்

3 "நம்ம எல்லாரும் பண மாலை அணிவிச்சிருகோம் அப்புறம் என்ன அந்த தொண்டர மட்டும் தலைவர் ஸ்பெஷலா கவனிகறார்
ஆமாம் அவன் போட்டது ரொம்ப காஸ்ட்லீயான காய்கறி மாலை"

4 "தலைவருக்கு பொது அறிவு ரொம்ப கம்மி ஆகிருச்சு
"ஏன்"
" பண மாலை போட்டா IT இலிருந்து ஆள் வருவாங்கனு சொன்னேன் , அதுக்கு அவங்க வந்ததும் தன்னோட லாப்டப்ப சரி பண்ணி வெச்சிட்டு போக சொல்லுங்கறாரு"

5 . "இருந்தாலும் தலைவர் கொஞ்சம் ஓவரா போறார்
"ஏன் என்ன ஆச்சு"
"நெறைய பண மாலை வரவும் வீட்டு வாசள்ள இங்கு கடன் ஏற்றுகொள்ளபடமட்டதுன்னு போர்டு மாட்டி வெச்சிருக்கார்"

6 . "ச்சை இந்த கிரெடிட் கார்டுகாரங்க தொல்லை தாங்க முடியல
" ஏன் தலைவரே
" கூட்டத்துக்கு நடுவில பண மாலைக்கு பதிலா கிரெடிட் கார்டு மாலைய போட்டு போயிருக்கான்"
"கவலை படாதீங்க தலைவரே அடுத்து பெரிய பில் மாலை வரும்"

7. மேல் கூறிய அனைத்தையும் விட பெரிய நகைச்சுவை மாயாவதியை பற்றி அவர்கள் எடுபிடிகள் கூறியிருக்கும் கறுத்து
"மாயாவதி எளிமையானவர் ஏழைகளின் தோழர்"


Tuesday, March 9, 2010

நித்தியானந்தா சீசன்

போலி சாமியார் ஜோக்ஸ் :

1 . "சுவாமி உங்கள பத்தி வீடியோ ரிலீஸ் ஆகிருக்கு"
"ச்சை முதல்ல திருட்டு dvd அ ஒழிக்க முதல்வர்கிட்ட மனு குடுக்கணும்"

2 . ஸ்வாமியோட தற்பெருமையால பாரு போலீஸ் நம்மள வலை வீசி தேடுது "
"ஏன் என்ன ஆச்சு"
" இந்தியாவிலயே அதிகமா மகளிர் இட ஒதுக்கீடு இருக்கறது நம்ம ஆசிரமத்தில் தான்னு பேட்டி குடுத்திருக்கார் "

3. "கதவை திற....... னு தத்துவங்களெல்லாம் உதிர்த்துட்டு இப்படி கதவை
மூடி ஒளிஞ்சிட்டிருகிங்கலே "
" காற்று வரட்டும்னு சொன்னேன் போலீஸ் இல்ல வருது "

4 . "Finance கம்பெனி ஆரம்பிச்ச நீங்க இப்ப ஆசிரமம் அரம்பிசிருகீங்க ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன சுவாமி
" வித்தியாசம்- Finance கம்பெனில குடுக்கற பணம் donationஉ தெரியாம மக்கள் ஏமாறுவாங்க
ஆசிரமத்துக்கு குடுக்கற பணம் donationஉ தெரிஞ்சும் மக்கள் ஏமாறுவாங்க.....
ஒற்றுமை- ரெண்ட பத்தியும் மக்கள் பின்னாடி பீல் பண்றது
சுவாமி "உங்க அடுத்த டார்கெட்"
"ஸ்கூல், காலேஜ்"

5. நித்தியானந்தா படத்தில் இருப்பது தான் இல்லை கிராபிக்ஸ் என்று சமாளிக்கிறார்.... வேறு எவ்வாறெல்லாம அவர் சமாளிக்ககூடும் என்று பார்ப்போம்... நகைச்சுவைக்காக.....

  • படத்தில் இருப்பது நான் இல்லைங்க என் தம்பி.... சத்தியானந்தா ... நாங்க ரெட்டை பிறவிகள்
  • லேபர் லா படி 8 மணி நேரம் தான் வேலை நான் என் சாமியார் duty முடிந்து என்ன செய்தால் உங்களுக்கென்ன.
  • கடந்த ஒரு மதமாக எனக்கு செலெக்டிவ் அம்னீஷியா நான் சாமியார் என்பதையே மறந்துவிட்டேன் "
  • அட நான் ஆளே இலிங்க நான் ஒரு கிராபிக்ஸ் லைட்ல மட்டும் தெரிவேன் ஆப் பண்ணி பாருங்களேன் ....(எஸ்கேப்)